• Sat. Oct 19th, 2024

வரலாற்றில் இன்று ஜூன் 21

Jun 21, 2021

சூன் 21 கிரிகோரியன் ஆண்டின் 172 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 173 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 193 நாட்கள் உள்ளன.

1307 – குலுக் கான் மங்கோலியர்களின் ககான் (பேரரசர்) ஆகவும் யுவான்களின் அரசராகவும் முடி சூடினார்.

1529 – பிரெஞ்சுப் படையினர் வடக்கு இத்தாலியில் இருந்து எசுப்பானியர்களால் வெளியேற்றப்பட்டனர்.

1621 – முப்பதாண்டுப் போர்: பிராகா நகரில் 27 செக் உயர்குடியினர் தூக்கிலிடப்பட்டனர்.

1734 – மொண்ட்ரியால் நகரை தீயிட்டுக் கொழுத்தி பெரும் சேதத்தை உண்டுபண்ணியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மரீ-யோசப் அஞ்செலீக் என்ற அடிமைப் பெண் தூக்கிலிடப்பட்டார்.

1736 – இலங்கையில் உள்ளூர் மொழிகளில் நூல்கள் அச்சிட அச்சியந்திரசாலையை ஒல்லாந்தர் நிறுவினர்.[1]

1749 – ஹாலிஃபாக்ஸ் அமைக்கப்பட்டது.

1788 – நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்காவின் 9வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1791 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயியும் அவரது குடும்பத்தினரும் பாரிசை விட்டு வெளியேறினர்.

1898 – அமெரிக்கா எசுப்பானியாவிடம் இருந்து குவாமைக் கைப்பற்றியது.

1900 – பேரரசி டோவாகர் சிக்சியின் ஆணைப்படி அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்சு, சப்பான் ஆகியவை மீது சீனா போரை அறிவித்தது.

1919 – கனடா, வினிப்பெக் நகரில் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் இருவர் உயிரிழந்தனர்.

1919 – இசுக்கொட்லாந்து, ஓர்க்னியில் செருமானியக் கப்பல் ஒன்றை அதன் கப்டன் லூர்விக் வொன் ரியூட்டர் வேண்டுமென்றே மூழ்கடித்ததில் ஒன்பது மாலுமிகள் உயிரிழந்தனர். இதுவே முதலாம் உலகப் போரின் கடைசி உயிரிழப்புகளாகும்.

1929 – மெக்சிக்கோவில் கிறிஸ்தேரோ போர் முடிவுக்கு வந்தது.

1930 – பிரான்சில் இராணுவத்துக்கு கட்டாய ஆட்சேர்ப்பு ஓராண்டுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

1940 – வடமேற்குப் பெருவழி ஊடான மேற்கிலிருந்து கிழக்குக்கான முதலாவது வெற்றிகரமான கடற்பயணம் பிரிட்டிசு கொலம்பியா, வான்கூவரில் இருந்து ஆரம்பமாகியது.

1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரான்சு மீது நடத்திய முற்றுகை தோல்வியடைந்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கி ஒன்று அமெரிக்கா, ஓரிகன் மாநிலத்தில் கொலம்பியா ஆற்றில் இருந்து குண்டுகளை ஏவியது.

1942 – இரண்டாம் உலகப் போர்: துப்ருக் இத்தாலிய, செருமனியப் படையினரிடம் வீழ்ந்தது.

1945 – இரண்டாம் உலகப் போர்: ஒகினவா சண்டை முடிவுக்கு வந்தது.

1963 – கருதினால் கியோவன்னி பத்தீசுத்தா மொண்டினி ஆறாம் பவுல் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1964 – அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில், குடிசார் இயக்க உரிமைத் தொழிலாளர்கள் மூவர் கு கிளக்சு கிளான் இயக்க உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1990 – மன்னாரில் கொண்டச்சி இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.

2000 – ஐக்கிய இராச்சியத்தில் நிறைவேற்றப்பட்ட தற்பால்சேர்க்கையை ‘ஊக்குவிப்பது’ சட்டவிரோதமானது என்ற சட்டமூலம் இசுக்கொட்லாந்தில் 99:17 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

2002 – உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.

2004 – முதலாவது தனியார் விண்ணூர்தி ஸ்பேஸ்சிப்வன் மனித விண்வெளிப் பறப்பை மேற்கொண்டது.

2006 – புளூட்டோவின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு துணைக்கோள்களுக்கு நிக்ஸ், ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது.

2009 – கிறீன்லாந்து தன்னாட்சி பெற்றது.

2012 – 200 ஆப்கானிய ஏதிலிகளைக் கொண்ட படகு இந்தியப் பெருங்கடலில் சாவகத்திற்கும் கிறிஸ்துமசு தீவுக்கும் இடையில் மூழ்கியதில் 17 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காணாமல் போயினர்.