• Mon. Dec 23rd, 2024

வரலாற்றில் இன்று மார்ச் 8

Mar 8, 2022

மார்ச் 8 கிரிகோரியன் ஆண்டின் 67 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 68 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 298 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1010 – பிர்தௌசி தனது சாஃனாமா என்ற இதிகாசத்தை எழுதி முடித்தார்.

1576 – எசுப்பானிய நாடுகாண் பயணி தியேகோ கார்சியா டி பலாசியோ முதன்முறையாக பண்டைய மாயன் நகரமான கொப்பானின் எச்சங்களைக் கண்ணுற்றார்.

1618 – யோகான்னசு கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.

1658 – வடக்குப் போர்களில் (1655–1661) ஏற்பட்ட பெரும் தோல்விகளை அடுத்து, டென்மார்க்-நார்வே மன்னர் மூன்றாம் பிரெடெரிக் தனது பகுதியின் அரைவாசிப் பகுதியை சுவீடனிடம் இழந்தார்.

1702 – ஆன் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார்.

1722 – ஈரானின் சபாவித்து அரசு ஆப்கானித்தானின் இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டனர்.

1736 – அப்சரித்து வம்சத்தின் நிறுவனர் நாதிர் ஷா ஈரானின் மன்னராக (ஷா) முடிசூடினார்.

1782 – ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்தில் கிறித்தவத்துக்கு மதம் மாறிய 96 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் பென்சில்வேனியாவின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களுமாவர்.

1817 – நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது.

1844 – முதலாம் ஆசுக்கார் சுவீடன்-நார்வே மன்னராக முடிசூடினார்.

1868 – சப்பானிய சாமுராய் சக்காய் நகரில் 11 பிரெஞ்சுக் கடற்படையினரைக் கொன்றான்.

1906 – பிலிப்பைன்சில் அமெரிக்கத் துருப்புக்களால் ஏறத்தாழ 600 ஏதிலிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

1908 – திருநெல்வேலி எழுச்சி 1908: திருநெல்வேலியில் பிரித்தானியர்களுக்கு எதிரான போராட்டத்தில் நால்வர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.

1910 – ரேமொன்டே டெ லாரோச் என்ற பிரான்சியர் வானோடிக்கான உரிமத்தைப் பெற்று, உலகின் முதலாவது பெண் வானோடியானார்.

1911 – அனைத்துலக மகளிர் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.

1917 – பன்னாட்டு பெண்கள் நாள் ஆர்ப்பாட்டம் உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் இடம்பெற்றது. இதுவே பெப்ரவரிப் புரட்சியின் (பழைய யூலியன் நாட்காட்டியில் பெப்ரவரி 23) ஆரம்பமாகும்.

1920 – முதலாவது நவீன அரபு நாடு சிரிய அரபு இராச்சியம் உருவாக்கப்பட்டது.

1921 – எசுப்பானியப் பிரதமர் எதுவார்தோ டாட்டோ மத்ரிதில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

1924 – யூட்டாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 172 பேர் உயிரிழந்தனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய இராணுவம் இடச்சுக் கிழக்கிந்திய இராணுவத்தை நிபந்தனையின்றிச் சரணடைய இறுதி எச்சரிக்கையை விடுத்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் ரங்கூன் நகரை சப்பான் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கைப்பற்றியது.

1947 – பெப்ரவரி 26 எதிர்ப்புப் போராட்டத்தை அடுத்து சீனக் குடியரசின் 13,000 இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் தைவானில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

1949 – வியெட்நாமிற்கு பிரான்சிடம் இருந்து அதிக சுயாட்சி வழங்குவதற்கும், வியட் மின்-தலைமையிலான வியட்நாம் சனநாயகக் குடியரசிற்கு எதிராக வியட்நாம் நாட்டை உருவாக்குவதற்கும் பிரெஞ்சு அரசுத்தலைவர் வின்சென்ட் ஓரியோலிற்கும், முன்னாள் வியட்நாம் பேரரசர் பாவோ டாயிற்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது.

1950 – சோவியத் ஒன்றியம் தன்னிடம் அணுக்குண்டு இருப்பதாக அறிவித்தது.

1957 – சூயெசு நெருக்கடிக்குப் பின்னர் எகிப்து சூயஸ் கால்வாயை முதல் தடவையாகத் திறந்தது.

1963 – சிரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு பஹாத் கட்சி ஆட்சிக்கு வந்தது.

1965 – வியட்நாம் போர்: 3,500 அமெரிக்கப் படைகள் தென் வியட்நாமில் தரையிறங்கினர்.

1971 – ஜோ பிரேசியர், முகம்மது அலி ஆகியோருக்கிடையேயான புகழ்பெற்ற நூற்றாண்டுக்கான குத்துச்சண்டை ஆரம்பமானது. இப்போட்டியில் பிரேசியர் 15 சுற்றுகளில் வென்றார்.

1979 – பிலிப்சு நிறுவனம் குறுவட்டை முதற்தடவையாக அறிமுகம் செய்தது.

1983 – பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் சோவியத் ஒன்றியத்தை தீய பேரரசு என வர்ணித்தார்.

1985 – லெபனான், பெய்ரூத் நகரில் மேற்கொள்ளப்பட்ட வாகனக் குண்டுத் தாக்குதலில், 45 பேர் கொல்லப்பட்டனர், 175 பேர் காயமடைந்தனர்.

2014 – 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்ற மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 மாயமாக மறைந்தது.