• Sat. Jul 27th, 2024

வரலாற்றில் இன்று நவம்பர் 13

Nov 13, 2021

நவம்பர் 13 கிரிகோரியன் ஆண்டின் 317 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 318 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 48 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1002 – இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது புனித பிறைசு நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது).

1093 – ஆல்ன்விக் என்ற இடத்தில் நடந்த ஆங்கிலேயருடனான போரில் இசுக்காட்லாந்து மன்னர் மூன்றாம் மால்க்கம், அவரது மகன் எட்வர்டு ஆகியோர் கொல்லப்பட்டனர்.

1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ரிச்சார்ட் மொன்ட்கோமெரி தலைமையிலான புரட்சிப் படையினர் மொண்ட்ரியாலைக் கைப்பற்றினர்.

1795 – கப்டன் புவுசர் என்பவனின் தலைமையில் பிரித்தானியப் படையினர் இலங்கையின் கற்பிட்டி பிரதேசத்தை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.

1851 – வாசிங்டனின் சியாட்டில் நகரில் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் வந்திறங்கினர்.

1887 – மத்திய லண்டன் பகுதியில் அயர்லாந்து விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.

1887 – நவம்பர் 11 இல் சிக்காகோவில் தூக்கிலிடப்பட்ட நான்கு தொழிலாளர் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.

1914 – பர்பர் இனத்தவர்கள் மொரோக்கோவில் எல் எரி என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளுடன் மோதி அவர்களுக்கு பெரும் சேதத்தை உண்டுபண்ணினர்.

1916 – முதலாம் உலகப் போர்: இராணுவத்துக்குக் கட்டாய ஆள் சேர்ப்பை ஆதரித்தமைக்காக ஆத்திரேலியப் பிரதமர் பில்லி இயூசு தொழிற் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

1918 – உதுமானியப் பேரரசின் தலைநகர் கான்ஸ்டண்டினோபில் நகரை கூட்டுப் படைகள் கைப்பற்றின.

1927 – நியூ செர்சியையும் நியூயார்க் நகரையும் அட்சன் ஆறு ஊடாக இணைக்கும் ஆலந்து சுரங்கப்பாதை திறக்கப்பட்டது.

1941 – இரண்டாம் உலகப் போர்: வானூர்தி தாங்கிக் கப்பல் ஆர்க் ரோயல் செருமனியின் யூ-81 கப்பலினால் தாக்கப்பட்டது. அடுத்த நாள் இது மூழ்கியது.

1946 – இலங்கை அரசியல்வாதியும் விமானியுமான ஜே. பி. ஒபயசேகர தனது சொந்த ஒற்றை-இயந்திர வானூர்தியை இலண்டனில் இருந்து இரத்மலானைக்கு 7,000 மைல்கள் தூரம் செலுத்தி சாதனை படைத்தார்.

1947 – சோவியத் ஒன்றியம் ஏகே-47 துப்பாக்கியை வடிவமைத்தனர். இதுவே உலகின் முதலாவது தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி ஆகும்.

1950 – வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் கார்லோசு டெல்காடோ சால்போட் கரகசு நகரில் படுகொலை செய்யப்பட்டார்.

1957 – கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இது பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை.

1965 – அமெரிக்காவின் யார்மூத் காசில் என்ற பயணிகள் கப்பல் பகாமசில் மூழ்கியதில் 90 பேர் உயிரிழந்தனர்.

1985 – கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூசு என்ற எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லப்பட்டனர்.

1986 – மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், மார்சல் தீவுகள் ஆகியன விடுதலை பெறுவதை உறுதிப்படுத்தும் சட்டமூலம் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.

1989 – இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீர இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1993 – யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீது இலங்கை விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

1993 – தவளை நடவடிக்கை: யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் நாகதேவன்துறை இராணுவ, கடற்படைக் கூட்டுத்தளங்களை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து பல தாங்கிகளையும் விசைப்படகுகளையும் கைப்பற்றினர். மொத்தம் 4 நாட்கள் இடம்பெற்ற இத்தாக்குதலில் 469 புலிகள் இறந்தனர்.

1994 – ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய சுவீடன் மக்கள் முடிவு செய்தனர்.

1995 – சவூதி அரேபியாவில் ரியாத் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்களும் இரண்டு இந்தியர்களும் உயிரிழந்தனர்.

2012 – முழுமையான சூரிய கிரகணம் ஆத்திரேலியாவிலும் தெற்கு பசிபிக் நாடுகளிலும் நிகழ்ந்தது.

2013 – அவாய் ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது.

2015 – பாரிசில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

2015 – புவியின் செயற்கைக்கோள் டபிள்யூடி1190எஃப் இலங்கையின் தென்கிழக்கே வீழ்ந்தது.