அக்டோபர் 30 கிரிகோரியன் ஆண்டின் 303 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 304 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 62 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்
637 – அந்தியோக்கியா ராசிதீன் கலீபாக்கள் தலைமையிலான முசுலிம் படையினரிடம் வீழ்ந்தது.
758 – குவாங்சோவை அரபு, பாரசீக கடற்கொள்ளையர் கைப்பற்றினர்.
1270 – சிசிலியின் முதலாம் சார்லசிற்கும் தூனிசின் சுல்தானுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் எற்பட்டதை அடுத்து 8-வது சிலுவைப் போரும் தூனிசு மீதான முற்றுகையும் முடிவுக்கு வந்தன.
1485 – ஏழாம் என்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1502 – வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார்.
1657 – எசுப்பானியப் படைகள் யமேக்காவை மீளக் கைப்பற்றுவதில் தோல்வி கண்டது.
1817 – வெனிசுவேலாவில் சுதந்திர அரசொன்றை சிமோன் பொலிவார் அமைத்தார்.
1831 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த நாட் டர்னர் வர்ஜீனியாவில் கைது செய்யப்பட்டார்.
1863 – டென்மார்க்கு இளவரசர் வில்லெம் முதலாம் ஜார்ஜ் என்ற பெயரில் கிரேக்க மன்னராக முடிசூடும் நோக்குடன் ஏதென்சை சென்றடைந்தார்.
1864 – தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஹெலேனா குடியேற்ற நாடு நிறுவப்பட்டது.
1905 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசு முதலாவது அரசியலமைப்பை அறிவித்து பிரதிநிதிகள் அவையை நிறுவினார். (இது யூலியன் நாட்காட்டியில் அக்டோபர் 17 இல் இடம்பெற்றது).
1918 – உதுமானியப் பேரரசு கூட்டுப் படைகளுடன் உடன்பாட்டுக்கு வந்ததில் மத்திய கிழக்கில் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
1920 – அவுஸ்திரேலியக் கம்யூனிஸ்ட் கட்சி சிட்னியில் அமைக்கப்பட்டது.
1925 – ஜான் லோகி பைர்டு பிரித்தானியாவின் முதலாவது தொலைக்காட்சி ஒளிபரப்பியை அமைத்தார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதிய கடன்-குத்தகை ஒப்பந்தத்தில் வழங்க பிராங்க்ளின் ரூசவெல்ட் ஒப்புதல் வழங்கினார்.
1941 – மேற்கு உக்ரைனில் 1,500 யூதர்கள் நாசிகளினால் பெல்செக் வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர்.
1945 – இந்தியா ஐநாவில் இணைந்தது.
1947 – உலக வணிக அமைப்பை ஏற்படுத்துவதற்கு முன்னோடியாக கட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம் நிறுவப்பட்டது.
1953 – பனிப்போர்: பொதுவுடைமைவாதிகளுக்கு எதிரான போரில், அணு ஆயுதங்களை அபிவிருத்தி செய்வதற்கான உத்தரவில் அமெரிக்கத் தலைவர் டுவைட் டி. ஐசனாவர் கையெழுத்திட்டார்.
1960 – முதலாவது வெற்றிகரமான சிறுநீரகக் கொடை ஐக்கிய இராச்சியத்தில் அளிக்கப்பட்டது.
1961 – சோவியத் ஒன்றியம் 50 மெகாதொன் அளவுள்ள சார் வெடிகுண்டு என்ற அணுகுண்டை வெடிக்க வைத்தது. இதுவே இந்நாள் வரை வெடிக்கப்பட்ட மிகப்பெரிய அணுகுண்டாகும்.
1961 – ஜோசப் ஸ்டாலினின் உடல் மாஸ்கோவின் கிரெம்லினில் லெனின் நினைவகத்தில் இருந்து அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது.
1964 – இலங்கையின் மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
1970 – வியட்நாமில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 293 பேர் உயிரிழந்து, 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1973 – ஐரோப்பாவையும் ஆசியாவையும் பொசுபோரசு நீரிணைக்கு மேலாக இணைக்கும் பொசுபோரசு பாலம் துருக்கியின் இசுதான்புல் நகரில் அமைக்கப்பட்டது.
1983 – ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் அர்கெந்தீனாவில் முதற்தடவையாகத் தேர்தல் இடம்பெற்றது.
1985 – சாலஞ்சர் விண்ணோடம் தனது கடைசி வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்தது.
1993 – வட அயர்லாந்து, கிரேசுடீன் என்ற இடத்தில் ஆலோவீன் விழா ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.
1995 – கனடாவில் இருந்து பிரிந்து செல்ல கியூபெக் மாநிலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு 50.6% to 49.4% என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.
2001 – இலங்கைப் பிரதமர் பேசவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் இறந்தனர், 15 பேர் காயமடைந்தனர்.
2006 – ஜெனீவாவில் விடுதலைப் புலிகளிக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன.
2014 – பாலத்தீன நாட்டை சுவீடன் அங்கீகரித்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாலத்தீனத்தை அங்கீகரித்த முதல் நாடு இதுவாகும்.
2015 – உருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 64 பேர் உயிரிழந்தனர், 147 பேர் காயமடைந்தனர்.