• Tue. Apr 16th, 2024

வரலாற்றில் இன்று செப்டம்பர் 14

Sep 14, 2021

செப்டம்பர் 14 கிரிகோரியன் ஆண்டின் 257 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 258 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 108 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

81 – டைட்டசு இறந்ததை அடுத்து அவரது சகோதரன் தொமீசியன் உரோமைப் பேரரசராக முடி சூடினார்.

629 – பேரரசர் எராக்கிளியசு பாரசீகப் பேரரசை வென்ற பின்னர் கான்ஸ்டண்டினோபிலை அடைந்தார்.

786 – அல்-காதி இறந்ததை அடுத்து அவரது சகோதரர் அருண் அல்-ரசீது அப்பாசியக் கலீபாவாக நியமிக்கப்பட்டார்.

1752 – கிரெகொரியின் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது. முன்னைய நாள் செப்டம்பர் 2 ஆகும்.

1808 – பின்லாந்துப் போர்: உருசியப் படைகள் சுவீடன் படைகளை வென்றன.

1812 – நெப்போலியப் போர்கள்: நெப்போலியனின் படைகள் மாஸ்கோவினுள் நுழைந்தன. உருசியப் படைகள் நகரை விட்டு விலகியதும் மாஸ்கோவில் தீ பரவ ஆரம்பித்தது.

1829 – உதுமானியப் பேரரசு உருசியாவுடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. உருசிய-துருக்கியப் போர் முடிவுக்கு வந்தது.

1846 – கோத் படுகொலைகள்: ஜங் பகதூர் ராணாவும் அவனது சகோதரர்களும் நேப்பாளத்தின் பிரதமர் உட்பட 40 அரச குடும்பத்தினரைப் படுகொலை செய்தனர்.

1901 – அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லி செப்டம்பர் 6 இல் இடம்பெற்ற கொலைமுயற்சியில் காயமடைந்து இறந்தார். தியொடோர் ரோசவெல்ட் புதிய அரசுத்தலைவரானார்.

1914 – ஆத்திரேலியாவின் முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் ஏஈ1 பப்புவா நியூ கினியில் கிழக்கு நியூ பிரித்தானியாவில் மூழ்கியது.

1917 – உருசியப் பேரரசு அதிகாரபூர்வமாகக் உருசியக் குடியரசானது.

1940 – அங்கேரிய இராணுவம் உள்ளூர் அங்கேரியர்களின் உதவியுடன் வடக்கு டிரான்சில்வேனியாவில் 158 உருமேனியர்களைப் படுகொலை செய்தனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியின் படைகள் கிரேக்கத்தின் பல கிராமங்களில் புகுந்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாகப் படுகொலைகளில் ஈடுபட்டனர். 500 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: மாஸ்ட்ரிக்ட் நகரம் நேச நாடுகளால் விடுவிக்கப்பட்டது.

1948 – போலோ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியத் தரைப்படை அவுரங்காபாது நகரைக் கைப்பற்றியது.

1954 – சோவியத் ஒன்றியம் அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.

1959 – சோவியத்தின் லூனா 2 விண்கலம் சந்திரனில் மோதியது. சந்திரனில் இறங்கிய மனிதனால் அமைக்கப்பட்ட முதலாவது விண்கலம் இதுவே.

1960 – அமெரிக்க சிஐஏயின் உதவியுடன், சயீரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மொபுட்டு செசெ செக்கோ ஆட்சியைக் கைப்பற்றினார்.

1960 – எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஓப்பெக்) உருவாக்கப்பட்டது.

1979 – அஃபிசுல்லா அமீனின் கட்டளைப்படி ஆப்கானித்தான் அரசுத்தலைவர் நூர் முகம்மது தராக்கி படுகொலை செய்யப்பட்டார். ஹஃபிசுல்லா அமீன் புதிய அரசுத் தலைவர் ஆனார்.

1982 – லெபனானின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பசீர் ஜெமாயெல் படுகொலை செய்யப்பட்டார்.

1984 – ஜோ கிட்டிங்கர் வளிமக் கூண்டில் அத்திலாந்திக் பெருங்கடலைத் தாண்டிய முதல் மனிதர் என்ற சாதனை படைத்தார்.

1985 – மலேசியாவின் மிக நீளமான பாலம், பினாங்கு தீவையும் பெரும்பரப்பையும் இணைக்கும் பினாங்கு பாலம் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.

1992 – எர்செக்-பொசுனியா தனிநாடாகப் பிரிந்தது சட்டபூர்வமற்றது என பொசுனியா எர்செகோவினாவின் அரசமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1997 – இந்தியாவின் மத்தியப் பிரதேசம், பிலாசுப்பூர் மாவட்டத்தில் விரைவுத் தொடர்வண்டி ஒன்று ஆற்றில் வீழ்ந்ததில் 81 பேர் உயிரிழந்தனர்.

1999 – கிரிபட்டி, நவூரு, தொங்கா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகளில் இணைந்தன.

2000 – எம்எஸ் டொஸ் கடைசித் திருத்தம் வெளியிடப்பட்டது.

2000 – விண்டோஸ் மில்லேனியம் வெளியிடப்பட்டது.

2001 – செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களில் இறந்தவரக்ளுக்கான நினைவுகூர்தல் நிகழ்வு வாசிங்டன் தேசியப் பேராலயத்தில் இடம்பெற்றது.

2003 – சுவீடனில் இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பில் யூரோ நாணயத்தை ஏற்றுக் கொள்ளும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

2003 – ஐரோப்பிய ஒன்றியத்தில் எசுத்தோனியா இணைவதற்கு அந்நாட்டில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

2005 – நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற புதிய அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.

2008 – உருசியாவின் ஏரோபுளொட் விமானம் பேர்ம் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 88 பேரும் உயிரிழந்தனர்.

2015 – ஈர்ப்பு அலைகள் குறித்த முதலாவது அவதானிப்பு அறிவிக்கப்பட்டது.