• Tue. Mar 26th, 2024

வரலாற்றில் இன்று செப்டம்பர் 23

Sep 23, 2021

செப்டம்பர் 23 கிரிகோரியன் ஆண்டின் 266 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 267 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 99 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1338 – நூறாண்டுப் போர்: முதலாவது கடற்படைச் சமர் இடம்பெற்றது. வரலாற்றில் முதல் தடவையாக வெடிமருந்துகளுடனான பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன.

1409 – 1368 வெற்றியின் பின்னர் முக்கிய வெற்றியை மிங் சீனா மீதான சமரில் மங்கோலியர்கள் பெற்றனர்.

1459 – ரோசாப்பூப் போர்கள்: முதலாவது முக்கிய சமர் புளோர் கீத் என்ற இடத்தில் நடைபெற்றது.

1641 – 100,000 பவுண்டு எடை தங்கத்துடன் த மேர்ச்சண்ட் ராயல் என்ற ஆங்கிலேயக் கப்பல் மூழ்கியது.

1780 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானிய இராணுவத் தளபதி ஜான் அன்ட்ரே உளவுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

1799 – இலங்கையில் அரச ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் நிறுத்தப்பட்டன. மத சுதந்திரம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.[1]

1803 – இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்: அசாயே என்ற இடத்தில் பிரித்தானியாவுக்கும் மராட்டியப் பேரரசுக்கும் இடையில் இடம்பெற்றது.

1806 – லூயிசும் கிளார்க்கும் அமெரிக்காவின் வடமேற்குப் பசிபிக் பிராந்தியத் தேடல் முயற்சியை முடித்துக் கொண்டு செயின்ட் லூயீசுக்குத் திரும்பினர்.

1821 – திரிப்பொலீத்சா நகரைக் கிரேக்கர்கள் தாக்கி 30,000 துருக்கியரைக் கொன்றனர்.

1846 – நெப்டியூன் கோள் உர்பெயின் ஜோசப், ஜோன் அடம்ஸ், யோகான் கோட்பிரீடு கல்லே ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1868 – எசுப்பானிய ஆட்சிக்கு எதிராக புவெர்ட்டோ ரிக்கோவில் கிளர்ச்சி இடம்பெற்றது.

1868 – புவெர்ட்டோ ரிக்கோவில் எசுப்பானிய ஆட்சியாளருக்கெதிராகக் கிளர்ச்சி ஆரம்பமானது.

1889 – நின்டெண்டோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1905 – நோர்வேயும் சுவீடனும் அமைதியாகப் பிரிவதற்கு உடன்பட்டன.

1913 – பிரான்சின் ரோலண்டு காரொசு என்பவர் நடுநிலக் கடலை முதல் முதலாக வானூர்தியில் கடந்து சாதனை படைத்தார்.

1932 – இப்னு சவூது தலைமையில் சவூதி அரேபியா ஒன்றிணைந்தது.

1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி பொம்மை அரசு இத்தாலிய சோசலிசக் குடியரசு உருவானது.

1950 – கொரியப் போர்: அமெரிக்கப் படைகள் தவறுதலாக பிரித்தானியப் படைகள் மீது நேப்பாம் குண்டுகளை வீசினர். 17 பேர் கொல்லப்பட்டு 79 பேர் காயமடைந்தானர்.

1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965 முடிவுக்கு வந்தது.

1966 – நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனின் கோர்ப்பனிக்கஸ் என்ற இடத்தில் மோதியது.

1980 – பாடகர் பாப் மார்லி தனது கடைசி நிகழ்ச்சியை பிட்ஸ்பர்க், பென்சில்வேனியாவில் நடத்தினார்.

1983 – மட்டக்களப்பு சிறை உடைப்பு: இலங்கை மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த 41 தமிழ் அரசியற் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பினர்.

1983 – செயிண்ட் கிட்சும் நெவிசும் ஐக்கிய நாடுகளில் இணைந்தது.

1983 – கல்ஃப் ஏர் விமானம் குண்டு ஒன்றினால் தகர்க்கப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 117 பேரும் கொல்லப்பட்டனர்.

1986 – இலங்கை கொழும்பில் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.

2002 – மொசிலா பயர் பாக்சு இணைய உலாவி வெளிவந்தது.

2004 – எயிட்டியில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக 3,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

2008 – பின்லாந்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.