• Thu. May 30th, 2024

வரலாற்றில் இன்று செப்டம்பர் 6

Sep 6, 2021

செப்டம்பர் 6 கிரிகோரியன் ஆண்டின் 249 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 250 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 116 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

394 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் தனது எதிராளியான இயூஜீனியசைப் போரில் தோற்கடித்துக் கொன்றார்.

1522 – பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் எசுப்பானியாவை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது.

1620 – வட அமெரிக்காவில் குடியேறுவதற்காக இங்கிலாந்தின் பிளைமவுத் துறையில் இருந்து யாத்திரிகர்கள் புறப்பட்டனர்.

1642 – இங்கிலாந்து லோங் நாடாளுமன்றம் நாடகங்களை அரங்கேற்றுவதற்குத் தடை விதித்தது.

1803 – பிரித்தானிய அறிவியலாளர் ஜான் டால்ட்டன் வெவ்வேறு மூலகங்களின் அணுக்களை வேறுபடுத்துவதற்கு சின்னங்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் யுலிசீஸ் கிராண்ட் தலைமையில் கென்டக்கியின் பதூக்கா நகரைக் கைப்பற்றின.

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் தென் கரொலைனாவின் மொரிஸ் தீவில் இருந்து விலகினர்.

1873 – இலங்கையில் புதிதாக வடமத்திய மாகாணம் அமைக்கப்பட்டு, மொத்தம் இலங்கையின் மாகாணங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டது. ஜே. இ. டிக்சன் அதன் முதலாவது அரச அதிபர் ஆனார்.

1885 – கிழக்கு ருமேலியா பல்கேரியாவுடன் இணைந்தது.

1901 – அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லி நியூயோர்க்கில் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.

1930 – அர்கெந்தீனாவின் அரசுத்தலைவர் இப்போலிட்டோ இரிகோயென் இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1939 – இரண்டாம் உலகப் போர்: தென்னாப்பிரிக்கா நாட்சி ஜெர்மனியுடன் போர் தொடுத்தது.

1940 – உருமேனியாவின் மன்னர் இரண்டாம் கரோல் பதவி விலகினார். அவரது மகன் முதலாம் மைக்கேல் மன்னராக முடி சூடினார்.

1943 – அமெரிக்காவின் பிலடெல்பியாவில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 79 பேர் உயிரிழந்தனர், 117 பேர் காயமடைந்தனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் இப்பிரசு நகரம் கூட்டுப் படைகளால் விடுவிக்கப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் எசுத்தோனியாவின் தார்த்தூ நகரைக் கைப்பற்றின.

1946 – இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி டி. எஸ். சேனநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.

1951 – தினமலர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது.

1952 – இங்கிலாந்து, ஆம்ப்சயர் என்ற இடத்தில் வான்காட்சி ஒன்றில் விமானம் வீழ்ந்ததில் 29 பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர்.

1955 – துருக்கியில் இசுதான்புல் நகரில் கிரேக்கர்களுக்கும் ஆர்மீனியர்களுக்கும் எதிராக இனக்கலவரங்கள் இடம்பெற்றன. பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியா பாக்கித்தானைத் தாக்கி, லாகூரை ஒரு மணி நேரத்தில் கைப்பற்றப் போவதாக அறிவித்தது.

1966 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கலின் காரணகர்த்தா பிரதமர் என்ட்றிக் வெர்வேர்ட் கேப் டவுன் நகரில் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.

1968 – சுவாசிலாந்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.

1970 – ஐரோப்பாவில் இருந்து நியூயோர்க் சென்று கொண்டிருந்த இரண்டு பயணிகள் விமானங்கள் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு யோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

1972 – மியூனிக் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது பலத்தீன கறுப்பு செப்டம்பர் தீவிரவாதிகள் ஒன்பது இசுரேலிய விளையாட்டு வீரர்களை பணயக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டனர்.

1976 – பனிப்போர்: சோவியத் வான்படை விமானி விக்தர் பெலென்கோ தனது மிக்-25 போர் விமானத்தை சப்பான் ஆக்கோடேட் நகரில் தரையிறக்கு அமெரிக்காவுக்கு அகதிக் கோரிக்கை விடுத்தார். கோரிக்கை ஏற்கப்பட்டது.

1986 – யூத ஓய்வு நாளின் போது இசுதான்புலில் இரண்டு தீவிரவாதிகள் யூத தொழுகைக் கூடம் ஒன்றில் 22 பேரைக் கொன்றனர்.

1990 – யாழ்ப்பாணக் கோட்டை மீதான புலிகளின் முற்றுகையின் போது இலங்கையின் குண்டுவீச்சு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

1991 – எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா ஆகிய பால்ட்டிக் நாடுகளின் விடுதலையை சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது.

1991 – அக்டோபர் 1 முதல் உருசியாவின் லெனின்கிராது நகரின் பெயர் மீண்டும் சென் பீட்டர்ஸ்பேர்க் என மாற்றப்படுவதற்கு உருசிய நாடாளுமன்ரம் ஒப்புதல் அளித்தது.

1997 – டயானாவின் உடல் இலண்டனில் அடக்கம் செய்யப்பட்டது. 2.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்நிகழ்வைப் பார்த்தனர்.

2003 – பலத்தீனப் பிரதமர் மகுமுது அப்பாசு பதவி விலகினார்.[2]

2007 – ஓச்சாட் நடவடிக்கை: சிரியாவின் அணுக்கரு உலையை அழிக்க இசுரேல் வான் தாக்குதலை மேற்கொண்டது.

2009 – பிலிப்பீன்சில் சம்பொவாங்கா தீபகற்பத்தில் 971 பேருடன் கப்பல் ஒன்று மூழ்கியதில் 10 பேர் மட்டும் உயிர் தப்பினர்.

2012 – துருக்கியில் மீன்பிடிப் படகு ஒன்று கவிழ்ந்ததில் 62 பேர் உயிரிழந்தன்ர்.