• Mon. Feb 17th, 2025

அமெரிக்காவில் சூறாவளி – 50 பேர் வரை பலி

Dec 11, 2021

அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது கென்டக்கி மாகாணம். இந்த மாகாணத்தில் சுழல் காற்று தாக்கியதில் 50 பேர் உயிரிழந்து இருக்கலாம் என செய்திகள் வெளிவந்துள்ளன.

சுமார் 200 மைல் தூரத்திற்கு சூறாவளி போல சுழன்று அடித்த காற்று கடுமையான சேதத்தை ஏற்படுத்தி விட்டதாக கென்டக்கி மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.

உயிரிழப்பு எண்ணிக்கை 100- வரை கூட இருக்கலாம் எனவும் அவர் அச்சம் தெரிவித்தார்.

கென்டக்கி மாகாண வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் மோசமான சுழல் காற்று இது எனவும் அங்குள்ள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

அங்குள்ள ஒரு மெழுகுவர்த்தி தொழிற்சாலையின் மேல் பகுதி சேதம் அடைந்ததன் காரணமாக இவ்வளவு பெரிய உயிர் சேதம் ஏற்பட்டு விட்டதாகவும் கவர்னர் தெரிவித்தார்.

சுழல் காற்று காரணமாக மேபீல்டு நகரத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.