ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷி, சிரியாவில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஈராக்கில் சன்னி இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கலிஃபா ஆட்சியை நிறுவி, பின்னர் அந்த ஆட்சியை சிரியாவுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என அடிப்படை நோக்கத்தோடு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டது.
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்த இயக்கம் அல்-கொய்தா இயக்கத்தோடு இணைந்து செயல்பட தொடங்கியது.
இந்த இயக்கங்களை அடியோடு அழிக்கும் நோக்கில் அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
பல வருட தேடல்களுக்குப் பின் கடந்த 2011 ஆம் ஆண்டு, பாகிஸ்தானில் பதுங்கி இருந்த அல்-கொய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்றது.
இதனை தொடர்ந்து சிரியாவில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையை அமெரிக்க ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அதன் தலைவர் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதாக பிடன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர்,
“இந்த நடவடிக்கையில் பங்கேற்ற அமெரிக்க படைகள் பத்திரமாக திரும்பியுள்ளனர். கடவுள் நமது படைகளை பாதுகாக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.