• Sat. Jul 20th, 2024

இங்கு வேண்டாம்; உலக தலைவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Aug 20, 2021

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபையில், அடுத்த மாதம் 21-27ம் திகதி வரையில் வருடாந்திர பொதுச்சபை கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் ஐநா உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். இதில், பருவநிலை மாற்றம், கொரோனா தடுப்பூசி, இனவெறி உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பில் விவாதிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்த கூட்டத்தில் நேரில் வந்து பங்கேற்பதை தவிர்த்து, வீடியோவின் மூலமாக தங்களின் கருத்துகளை பதிவு செய்யும்படி அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

அத்துடன் இது குறித்து 192 ஐ.நா உறுப்பு நாடுகளுக்கும் அமெரிக்க தூதரகத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

அந்த கடிதத்தில், ‘கொரோனா பரவல் காரணமாக, தலைவர்கள் நேரில் வருவதை தவிர்த்து, ஒரு வீடியோவில் தங்களின் கருத்துகளை பதிவு செய்து அனுப்பலாம். நியூயார்க்கிற்கு அதிகளவில் தலைவர்கள் வருவதால், கொரோனா பரவல் ஆபத்து அதிகரிக்கும்,’ என கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.