• Fri. Oct 18th, 2024

உலகின் பாரம்பரிய பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பிரபலமான நகர்; எதற்காக?

Jul 21, 2021

பிரிட்டனிலுள்ள லிவர்பூல் நகர் யுனெஸ்கோவின் உலகின் பாரம்பரியமான தளங்களின் பட்டியலில் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டில் வாக்கெடுப்பு நடத்திய பின்பு யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவினர் இந்த தகவலை அறிவித்துள்ளனர்.

லிவர்பூல் நகரில் கால்பந்து மைதானம் போன்ற பல புதிய கட்டிடங்கள் பாரம்பரியத்தை குறைப்பதால் பட்டியலில் நீக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளார்கள்.

கடந்த 2014 ஆம் வருடத்தில் லிவர்பூல் உலகின் பாரம்பரிய தளம் என்று அறிவிக்கப்பட்டிருந்தமை.
மேலும் லிவர்பூல், உலகத்தின் பாரம்பரியப்பட்டியலில் இருந்து மூன்றாவதாக நீக்கப்பட்டிருக்கிறது.
இதேவேளை இதேபோன்று கடந்த 2007 ஆம் வருடத்தில் ஓமான் என்ற வனவிலங்கு சரணலாயம் நீக்கப்பட்டது.

அதன் பின்பு 2009 ஆம் வருடத்தில் ஜெர்மன் நாட்டில் உள்ள டிரெஸ்டன் எல்பே என்ற பள்ளத்தாக்கும் நீக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் லிவர்பூல் நகரத்தின் மேயரான Joanne Anderson, இந்த தீர்மானம் வருத்தமளிப்பதாக கூறியுள்ளதுடன், இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாமா? என்று பிரிட்டன் அரசுடன் சேர்ந்து செயலாற்றப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.