பிரித்தானியா சுகாதார செயலாளர் மாட் ஹான்காக்(Matt Hancock) தனது உதவியாளருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர் தனது பதவியை ராஜினிமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தொடர்பான செய்தி தான் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
Matt Hancock தனது உயர்மட்ட பெண் உதவியாளரான Gina Coladangelo-உடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகின.
இந்த கொரோனா காலகட்டத்தில், ஒரு சுகாதார செயலாளராக Matt Hancock மக்களிடம் சமூக இடைவெளி விடுங்கள், யாரும் யாரையும் கட்டியணைக்காதீர்கள் என்று அறிவுறுத்திய இவரே இப்படி, தனது உதவியாளரான, திருமணமான ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கிறாரா? இவரை என்ன செய்யலாம் என்று இணைத்தில் பொது மக்கள் கிழித்துத் தொங்க விட்டு வருகிறார்கள்.
அரசியல்வாதிகள் அவர் பதவி விலகவேண்டும் என்றும், அவரை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்றும் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், Matt Hancock சற்று முன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.