
இங்கிலாந்தில் கொரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு முதல்முறையாக கொரோனா உயிரிழப்பு இல்லாத தினம் கடந்த செவ்வாய்க்கிழமை(01) பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, நோய் பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை வரும் 21-ஆம் தேதி முதல் தளர்த்துவது குறித்து இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருகிறது.
எனினும், கடந்த 2 மாதங்களில் இல்லாத அதிகபட்ச தினசரி கொரோனா தொற்று நேற்று முன் தினம்(04) பதிவு செய்யப்பட்டது. அன்று மட்டும் 6,238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தச் சூழலில் அரசு அதிகாரி ஒருவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
’திட்டமிட்டபடி 21-ஆம் தேதி முழு ஊரடங்கு தளர்த்தப்படும். அப்போது, முகக் கவசம், வீடுகளிலிருந்து பணியாற்றுவது போன்ற கட்டுப்பாடுகளைத் தொடர்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது” என்றார்.