• Tue. Nov 5th, 2024

பிரித்தானிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்!

Sep 23, 2021

இலங்கையை சிவப்பு பட்டியலிலிருந்து நீக்கிய போதிலும் இலங்கைக்கு அத்தியாவசிய பயணங்களைத் தவிர அங்கு செல்வதை தவிர்க்குமாறு பிரித்தானிய பிரஜைகளுக்கு அந்நாடு அறிவுறுத்தியுள்ளது.

நேற்றுப் புதன்கிழமை முதல் கொவிட் நிலைமையில் இலங்கையானது, இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலி லிருந்து நீக்கப்பட்டு அம்பர் பட்டியலுக்கு மாற்றப் பட்டுள்ளது.

எனினும் கொவிட்-19 தற்போதைய மதிப்பீட்டின் படி முழு இலங்கைக்கும் அத்தியாவசிய பயணம் தவிர மற்ற அனைத்துக்கும் எதிராக வெளிநாட்டு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.