• Sun. May 19th, 2024

விசாரணையை தொடங்கிய லண்டன் பொலிசார் – பிரதமர் பொறிஸுக்கு நெருக்கடி

Jan 25, 2022

இங்கிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 1 லட்சத்துக்கும் கூடுதலானோர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து கொரோனா பரவலால் மக்கள் பாதிப்படைந்து உள்ளனர்.

இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில், லண்டன் நகரின் டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில், முதல் ஊரடங்கு காலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில், பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்றுள்ளார்.

அவரது இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். மேலும் போரிஸ் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் தனது செயலுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் பகிரங்க மன்னிப்பு கேட்டு கொண்டார். ஆனால் போரிஸ் ஜான்சனின் மன்னிப்பை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடத்தியது பற்றி லண்டன் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதுபற்றி மெட்ரோபொலிட்டன் காவல் ஆணையாளர் கிரெஸ்சிடா டிக் கூறும்போது, டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் நடந்த எண்ணற்ற நிகழ்ச்சிகள் பற்றி ஸ்காட்லாந்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர் என கூறியுள்ளார்.

நாட்டில் கொரோனா பரவலை முன்னிட்டு ஊரடங்கு அமலில் இருந்தபோது இதுபோன்ற விருந்து நிகழ்ச்சிகளை நடத்தியதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன.

அதோடு பிரதமர் பொறிஸ் பதவி விலக வேண்டும் என்று கோஷமும் எழுப்பப்பட்டது.