ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.
ஜெர்மனி நாட்டின் மேற்குப் பகுதிகளில் கடந்த புதன்கிழமையிலிருந்து கனத்த மழை பொழிந்து வருவதால் திடீர் வெள்ளப்பெருக்கு உருவானது. இதனால் பக்கத்து நாடுகளான நெதர்லாந்து பெல்ஜியம் போன்ற நாடுகளும் பாதிப்படைந்திருக்கிறது.
மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் பாலங்களும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது.
எனவே அங்கு வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளனர். இதற்கிடையே, மீட்புப்படையினர் காணாமல் போனவர்களை தேடி வருகிறார்கள்.
மேலும் Bonn நகரிற்கு அருகே இருக்கும் Euskirchen பகுதியில் ஒரு அணையில் விரிசல் அதிகரிக்கிறது.
இந்த நிலையில் அங்கு வசிக்கும் 4500 மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அந்த அணை உடையும் நிலையில் இருப்பதால் மக்கள் பதற்றத்துடன் அச்சத்தில் உறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.