• Thu. Nov 21st, 2024

ஜேர்மனியில் உணவு டெலிவரி; ஆப்கான் முன்னாள் அமைச்சரின் பரிதாப நிலை!

Aug 24, 2021

ஆப்கானிஸ்தானின் முன்னாள் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் சையத் அகமத் (Syed Ahmad), ஜேர்மனியில் உணவு டெலிவரி செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சையத் அகமத் ஜெர்மனியின் லீப்ஜிக் நகரில் அப்பகுதி வாசிகளுக்கு உணவுப் பொருட்களை டெலிவரி செய்து வருவதை ஜெர்மனி ஊடகங்களும் உறுதி செய்துள்ளன.

அத்துடன் டெலிவரிக்கான உணவுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சையத் அகமத் (Syed Ahmad) செல்லும் காட்சிளும் பரவி வருகிறது.

கடந்த ஆண்டு தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த சையத் அகமத், அதன்பின்னர் ஜெர்மனியின் லீப்ஜிக் நகருக்குக் குடிபெயர்ந்தார். இதுகுறித்து சையத் அகமத் (Syed Ahmad) கூறும்போது,

“நான் தற்போது எளிமையாக வாழ்கிறேன். மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன். நான் நிறைய பணிகளுக்கு முயற்சி செய்தேன். ஆனால், எனக்குக் கிடைக்கவில்லை.

நான் பணிக்குச் செல்லும் பணத்தைச் சேமித்து ஜெர்மன் கற்று வருகிறேன். ஜெர்மன் டெலிகொம் துறையில் பணிக்குச் சேர்வதுதான் தற்போது என் இலக்காக உள்ளது” என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை ஆப்கானில் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக சையத் அகமத் (Syed Ahmad) இருந்த காலத்தில், ஆப்கானில் கிராமப்புறப் பகுதிகளில் தொலைபேசி சேவையைக் விரிவுப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.