• Wed. Dec 25th, 2024

ஒரே நாளில் 1 கோடி தடுப்பூசிகள்; 11 நாட்களில் 3வது முறையாக சாதித்த இந்தியா

Sep 6, 2021

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி 16ந்தேதி தொடங்கியது.

இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

அதன்பின்னர் கடந்த ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந் நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் 1 கோடிக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் இன்று செலுத்தப்பட்டு உள்ளன.

இதேவேளை கடந்த 11 நாட்களில் 3வது முறையாக இந்த இலக்கு அடையப்பட்டு உள்ளது.

இதன்படி, இந்தியாவில் இதுவரை 69.68 கோடி (69,68,96,328) கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.