• Fri. Jul 26th, 2024

30 வயது இளைஞரை கடத்திச் சென்று திருமணம் செய்த 50 வயது பெண்

Aug 2, 2021

இந்தியாவில் 30 வயது இளைஞரை கடத்திச் சென்று 50 வயது பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் வேளாண் துறை ஊழியராக பணியாற்றி வருபவர் ரிங்கேஷ் கேஷர்வானி. 30 வயது மதிக்கத்தக்க இவர் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தனது அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக 50 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நீண்ட நாட்களாக நிர்பந்தித்து வந்தார்.

ஆனால், நான் அதற்கு ஒத்து போகவில்லை. இந்நிலையில், கடந்த ஜுன் மாதம் 15-ஆம் திகதி குறித்த பெண் தனது நண்பர்களுடன் என்னை தாக்க வந்தார். அதுமட்டுமின்றி, சில பொலிசாருடன் சேர்ந்து கூட்டுச் சேர்ந்து என்னை பொய் வழக்கில் சிக்க வைக்கவும் முயன்றார்.

இதையடுத்து, ஜாபல்பூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அன்றே புகார் தெரிவித்திருந்தேன் எனினும், அது பயனளிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து, ஜூன் 16ம் தேதியன்று, அந்த பெண் அவரது நண்பர்களின் உதவியுடன் கோஹல்பூர் காவல் நிலையத்திற்கு முன்னால் கத்தி முனையில் என்னை கடத்திச் சென்று அவரது உறவினர் வீட்டில் அடைத்து வைத்தார்.

மறுநாள் 17-ஆம் திகதி, என்னை கத்தி முனையில், கோவில் ஒன்றிற்கு அழைத்துச் சென்று, மயக்க மருந்து கொடுத்து, மயக்க நிலையிலே என்னை வலுக்கட்டாயமாக தாலி கட்ட வைத்தனர்.

அதன் பின் அவர்களிடம் இருந்து தப்பி ஓடி வந்த நான் அன்றைய தினமே, ஜபல்பூர் ரேஞ்ச் ஐஜி, எஸ்பி மற்றும் பிற காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தேன்,

ஆனால் எனக்கு எந்த பதிலும் வரவில்லை இதனை நிரூபிக்கும் பொருட்டு கோஹல்பூர் காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளையும் அவர் கோரியுள்ளார். தொடர்ந்து, அவரது புகார் மீது பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், நீதிமன்றத்தை நாடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.