ஆந்திராவின் சித்தூர் , வலசப்பள்ளியில் சங்கராந்தி விழாவின் ஒரு பகுதியாக ஊர் எல்லையில் உள்ள எல்லாம்மா கோவிலுக்கு நேர்த்திக்கடன் இருந்து ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கிராம மக்கள் அனைவரும் எல்லம்மா கோவிலுக்கு இரவில் ஆடு, கோழிகளை பலிகொடுத்தனர்.
அப்போது வெட்டுவதற்கான ஆடு ஒன்றை 35 வயது இளைஞரான சுரேஷ் பிடித்துக் கொண்டிருந்தார்.
ஆடுகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சலபதி என்பவர் நன்றாக மது அருந்தி முழு போதையில் இருந்தார்.
நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் நடைபெற்ற இந்த பலிகொடுக்கும் சம்பவத்தின்போது போதையில் இருந்த சலபதி ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த சுரேஷ் தலையை ஆடு வெட்டும் கத்தியால் ஓங்கி வெட்டினார்.
இதனால் படுகாயம் அடைந்த சுரேஷ் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சுரேசுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இச் சம்பவம் தவறுதலாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாக கூறப்படுகின்றது.