இந்தியா – கர்நாடகாவில் 40க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டு சாலையில் வீசிச்சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
60 குரங்குகளை கொலை செய்து கோணிப்பைகளில் கட்டி சாலை ஓரத்தில் வீசியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது அந்த கோணிப்பைக்குள் 14 குரங்குகள் மயக்க நிலையில் இருந்த நிலையில் , அவை மீட்கப்பட்டு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைகளுக்காக கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனினும் எஞ்சிய 46 குரங்குகளும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கர்நாடக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வாறு பெரும் தொகையான குரங்குள் மனிதாபிமானமின்றி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.