• Wed. Jan 15th, 2025

இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கான தடை நீட்டிப்பு!

Jul 31, 2021

உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் சர்வதேச விமான சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் உள்ள நிலையில் இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடர்ந்து வருகிறது. கடந்த மாதத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை விதித்த தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில் மீண்டும் உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சர்வதேச விமான சேவைகளுக்கான தடையை ஆகஸ்டு 31 வரை நீட்டித்து விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.