• Sat. Nov 30th, 2024

சென்னையில் களைகட்டும் புத்தக கண்காட்சி!

Feb 21, 2022

சென்னையில் 45-வது புத்தக கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி, மார்ச் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெற்று வருகிறது. 800 அரங்குகளில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால், சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புத்தக கண்காட்சியில் குவிந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் புத்தக கண்காட்சிக்கு வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். இலக்கியம், சிறுகதை, நாவல், அறிவியல், வரலாறு என பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்கள் இந்த கண்காசியில் இடம்பெற்றுள்ளன.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பொதுமக்கள் புத்தக கண்காட்சிக்குள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 5 நாட்களில் மொத்தம் ஒன்றரை லட்சம் பேர் புத்தக கண்காட்சிக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.