• Sun. Feb 16th, 2025

தமிழ்நாட்டில் தனது ஜனநாயக கடமையை ஆற்றிய வெளிநாட்டு இளைஞர்!

Feb 19, 2022

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என மொத்தம் 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அமெரிக்காவில் இருந்து வந்து இளைஞர் ஒருவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் இம்தியாஸ் ஷெரிப் அமெரிக்காவில் இருந்து வந்து தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.