• Fri. Mar 24th, 2023

ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராகச் சந்திரசேகரன் நியமனம்

Mar 14, 2022

ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராகச் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசிடம் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டா குழுமம் விலைக்கு வாங்கியது.

இதையடுத்து ஜனவரி இறுதியில் ஏர் இந்தியா நிறுவனம் டாட்டா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலராகத் துருக்கி ஏர்லைன்சின் முன்னாள் தலைவர் இல்கர் ஐசியை நியமிக்க டாட்டா குழுமம் முடிவு செய்த நிலையில் அதை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராக டாட்டா சன்ஸ் தலைவரான சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏர் இந்தியா இயக்குநரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.