இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் மின் உற்பத்தி 70 சதவீதம் நிலக்கரியை நம்பியே உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தும் நிலமை ஏற்பட்டுள்ளது.
இதனால், பல்வேறு மாநில முதல் மந்திரிகளும் நிலக்கரி பற்றைக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி திறனை பிரதான அனல் மின் நிலையங்கள் குறைத்துள்ளன.
இதன் காரணமாக சுழற்சி முறையில் பஞ்சாபில் மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.