• Thu. Nov 21st, 2024

தமிழகத்தில் தொடரும் மழை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Nov 10, 2021

தமிழகத்தில் நாளையும் 8 மாவட்டங்களில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை 6 மணி அளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கக்கூடும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி நாளை சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், காஞ்சீபுரம், விழுப்புரம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் என்வும் குறிப்பிடப்பட்டுள்ளது,

அதோடு செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, நாமக்கல், திருச்சி மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்” எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த சிலதினங்களாக சென்னையில் பெய்துவரும் கனமழையால் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.