• Sun. Jan 19th, 2025

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு

Aug 17, 2021

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்ந்துள்ளது. சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து ரூ.875.50க்கு விற்பனையாகிறது. ஏற்கனவே சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.850.50 ஆக இருந்தது.

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.5 ரூபாய் குறைந்து ரூ.1,756-க்கு விற்பனையாகிறது. சமையல் எரிவாயு விலை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து உயர்ந்துக்கொண்டே செல்வது இல்லத்தரசிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.