நாட்டில் கொரோனா 2வது அலையில் பாதிப்புகளின் தீவிரம் சமீப காலங்களாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 25,072 (நேற்று 30,948) பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.
இந்த எண்ணிக்கை நேற்று 30,948 ஆகவும், நேற்று முன்தினம் 34,457 ஆகவும் பதிவாகி இருந்தது. இதனால், முந்தின பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது இன்று தொற்று குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 3,24,49,306 ஆக உயர்வடைந்து உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 389 பேர் உயிரிழந்து உள்ளனர். இது நேற்று 403 ஆக இருந்தது. இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,34,756 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோன்று 44,157 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3,16,80,626 ஆக உயர்வடைந்து உள்ளது. நாடு முழுவதும் 3 லட்சத்து 33 ஆயிரத்து 924 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த எண்ணிக்கை நேற்று 30,948 ஆகவும், நேற்று முன்தினம் 34,457 ஆகவும் பதிவாகி இருந்தது. இதனால், முந்தின பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது இன்று தொற்று குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 3,24,49,306 ஆக உயர்வடைந்து உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 389 பேர் உயிரிழந்து உள்ளனர். இது நேற்று 403 ஆக இருந்தது. இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,34,756 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோன்று 44,157 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3,16,80,626 ஆக உயர்வடைந்து உள்ளது.
மேலும் நாடு முழுவதும் 3 லட்சத்து 33 ஆயிரத்து 924 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.