• Sat. Nov 16th, 2024

கேரளாவில் கோரமுகம் காட்டும் கொரோனா; மேலும் 23,676-பேருக்கு தொற்று

Aug 3, 2021

இந்தியாவின் கேரளாவில் மேலும் 23,676-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 148-பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து கேரளாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17,103- ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1.99 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தொற்று பாதிப்பு விகிதம் 11.87- சதவிகிதமாக உள்ளது.

மேலும் கேரளாவில் அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 4276-பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.