இந்தியாவில் மிக வேகமாக பரவும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களிடையே மூடநம்பிக்கைகளும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கோயம்புத்தூரில் கடந்த மாதம் ‘கொரோனா தேவி’ என்ற 1.5 அடி உயரம் கொண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக உத்தரபிரதேச மாநிலத்தில் ’கொரோனா மாதா’ என்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சுல்லாப்பூர் கிராமத்தில் ’கொரோனா மாதா’ என்ற பெயரில் சிலை ஒன்றை அக்கிராமவாசிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைத்துள்ளனர்.
கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த ’கொரோனா மாதா’ முகக்கவசம் அணிந்திருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.