• Sat. Jul 20th, 2024

தமிழகத்தில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

Jul 31, 2021

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் இன்று 1,986- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25,59 ஆயிரத்து 597- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 2,178-பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்று பாதிப்பைக் கண்டறிய 1 லட்சத்து 60 ஆயிரத்து 171- மாதிரிகள் இன்று பரிசோதிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று 204- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20,716- ஆக உள்ளது.