• Fri. Apr 19th, 2024

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் பயணம் தோல்வி

Aug 12, 2021

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் பயணம் தோல்வி அடைந்தது.

இயற்கை பேரழிவு, விவசாயம் உள்ளிட்டவற்றை பற்றி அறிய ஈஓஎஸ் -03 என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. பூமியை கண்காணிக்கும் Eos-03 செயற்கைக்கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி எஃப் – 10 ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருந்தது.

பூமியின் மேற்பரப்பில் இருந்து 36,000 கி.மீ தூரத்தில் ராக்கெட் நிலைநிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஜிஎஸ்எல்வி எஃப் – 10 ராக்கெட் இன்று அதிகாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதற்கான பணிகள் நடைபெற்றன.

அதன்படி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் கவுன்ட்டவுன் தொடங்கியது. 26 மணி நேர கவுண்ட்டவுன் நிறைவடைந்ததும், 2வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை 5.43 மணிக்கு ஜிஎஸ்எல்பி எப்.10 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணத்திட்டம் தோல்வியை அடைந்துள்ளது. Eos-03 செயற்கைகோளுடன் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப் 10 ராக்கெட் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.

18.39 நிமிடத்தில் செயற்கைகோள் அதன் சுற்றுவட்டப் பாதையையை அடையவில்லை என்பதால் இத்திட்டம் தோல்வியை சந்தித்துள்ளது.