![](https://tamil4.com/wp-content/uploads/2021/08/mom-killed-son.jpg)
ஆன்லைனில் பாடம் படிக்காத 4 வயது மகனை அவரது தாயாரே கொலை செய்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சிகா. இவருக்கு 4 வயது மகன் ரிதான் என்பவர் இருந்தார்.
ரிதான் சமீபத்தில் சிறுவர் மழலையர் பள்ளியில் சேர்க்கப்பட்ட நிலையில் ஆன்லைன் பாடத்தை கவனிக்காமல் விளையாட்டுத்தனமாக இருந்துள்ளதாக தெரிகிறது
இதனால் ஆத்திரமடைந்த சிக்கா தலையணையால் சிறுவனின் முகத்தில் வைத்து அமுக்கியுள்ளார்.
இதில் சிறுவன் மூச்சு திணறி உயிரிழந்ததாக தெரிகிறது. அதன் பின்னர் விபரீதத்தை உணர்ந்து அதிர்ச்சி அடைந்த சிக்கா, தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் ஆனால் அவர் காப்பாற்றப்பட்டு தற்போது அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
ஆன்லைன் பாடம் படிக்காத 4 வயது மகனை அவரது தாயாரை கொலை செய்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது