சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்த கனமழை நீடிக்கும்.
அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நீலகிரி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் அணைகளும் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.