• Thu. Apr 25th, 2024

தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்

Mar 25, 2022

தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று தமிழகம் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல, நாளை 26ம் தேதி மற்றும் 27ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த தொடர் 4 நாட்கள் மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இது தொடர்பாக உள்ளதாவது:

தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வெப்பச் சலனம் காரணமாகவும் மார்ச் 25-ம்தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். வரும் 26, 27, 28-ம் தேதிகளில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதில், இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26ம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணிநேரத்தில் கொடைக்கானலில் 8 செ.மீ., ராஜபாளையம், பிளவக்கல் பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.