கேரளாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் ஆறுகளில் திறந்துவிடப்பட்டுள்ளன.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஆற்றங்கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், கேரளாவின் கோட்டயம் மாவட்டம் முண்டகாயம் பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலரைக் காணவில்லை என கூறப்படும் நிலையில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றதாகவும் கூறப்படுகின்றது.