• Sun. Dec 10th, 2023

இலவசமாக வாரத்துக்கு ஒருநாள் மதுபானம் வழங்க திட்டம்!

Jul 9, 2021

கொரோனாவால் குறைந்த மதுபான விற்பனையை அதிகரிக்க தெலுங்கானாவில் வாரத்துக்கு ஒருநாள் மதுபானம் இலவசமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனாவால் குறைந்த மதுபான விற்பனையை அதிகரிக்க தெலுங்கானா அரசு புதுவிதமான யுக்தியை கையில் எடுக்கிறது.பொதுவாக அரசு மக்கள் நலன் சார்ந்த பொருட்களை இலவசமாக வழங்கும்.

தமிழகத்தில் டிவி, மிக்சி, மின்விசிறி, ஆடுகள் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆனால் தெலுங்கானா அரசு வித்தியாசமான முயற்சியை கையில் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது மதுபானங்களை இலவசமாக கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.கொரோனாவால் குறைந்த மதுபான விற்பனையை அதிகரிக்க இந்த வழியை கையில் எடுக்கிறார்கள்.

மக்கள் மதுக்கடைகளுக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. உரிமம் பெற்ற மதுக்கடையில் வாரம் ஒரு நாள் இலவசமாக மது வழங்கப்படும்.

இதற்காக டோக்கன் விநியோகிக்கப்பட்டு, அதன் பின்னர் குறிப்பிட்ட அளவுக்கு இலவசமாக மது வழங்கப்படும் என தெரிகிறது. இந்த புதிய திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.