• Wed. Dec 25th, 2024

இந்தியாவில் பொது பணவீக்கம் அதிகரிப்பு

Nov 16, 2021

இந்தியாவில் பொது பணவீக்கம் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், ”கச்சா எண்ணெய் மற்றும் உற்பத்தி துறை பொருள்களின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டத்தை அடுத்து கடந்த ஒக்டோபரில் மொத்த விற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் 12.54 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த பணவீக்கம் நடப்பாண்டு ஏப்ரலில் இருந்து தொடர்ந்து ஏழு மாதங்களாக இரட்டை இலக்க அளவிலேயே இருந்து வருகிறது. பொது பணவீக்கம் நடப்பாண்டு செப்டம்பரில் 10.66 சதவீதமாகவும், 2020 ஒக்டோபரில் 1.31 சதவீதமாகவும் இருந்தது.

அதேபோன்று உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் ஒக்டோபரில் -1.69 சதவீதமாக இருந்தது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.