• Tue. Sep 10th, 2024

சொத்து தகராறில் தந்தையை அடித்து கொன்ற மகன்- இந்தியாவிl கொடூரம்

Feb 23, 2022

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் சொத்து தகராறில் 65 வயது தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் சிங்பூம் மாவட்டத்தில் உள்ள துவாரிதி கிராமத்தில் வசிக்கும் 40 வயது நபர் தன்னுடைய தந்தையிடம் அவருடைய சொத்தில் தன்னுடைய பங்கை பிரித்து கேட்டுள்ளார்.

இதற்கு அவரது தந்தை மறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றியதில் கோபமடைந்த மகன் தந்தையின் தலையை சுவரில் பலமுறை அடித்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அந்த நபர் போலீசுக்குப் பயந்து காதிகிராமில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார்.

தகவலறிந்த போலீசார் அந்த நபரை உறவினர் வீட்டில் வைத்து கைது செய்தனர்.

மேலும் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.