• Fri. Jul 26th, 2024

இன்று முதல் சென்னையில் சிறப்பு பேருந்துகள்

Nov 1, 2021

தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு மொத்தமாக 9,806 பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், பூந்தமல்லி மற்றும் தாம்பரம் ரயில் நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் என 6 மையங்களில் எதிர்வரும் 3 ஆம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

மேலும் அரசு பேருந்து இயக்கம் தொடர்பான தகவல்களை 044 24749002 எண்ணிற்கு அழைக்கலாம். தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் தொடர்பாக புகார் அளிக்க 1800 425 6151 என்ற எண்ணை அழைக்கலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.