• Sat. Dec 7th, 2024

நீர் மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணை பரிசோதனை வெற்றி

Dec 14, 2021

ஒலியைவிட அதிக விரைவாக சென்று நீர் மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் ஸ்மார்ட் என்ற ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஏவுகணை சோதனை ஒடிசாவின் பாலாசூரில் நடைபெற்றது.

இந்திய கடற்படைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு உருவாகியுள்ள இந்த ஏவுகணை ஒலியை விட அதி விரைவாக சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது என கூறப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை போர்கப்பலில் இருந்து ஏவப்பட்டால் அதிகப்பட்சமாக 650 கிலோமீற்றர் தொலைவுக்குச் செல்லும் திறன் பெற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளது.