• Sun. Dec 22nd, 2024

தலைமைச் செயலகத்தில் மீண்டும் ஒளிரும் தமிழ் வாழ்க பதாகை!

Jul 29, 2021

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வண்ண விளக்குகளால் தமிழ் வாழ்க என்ற பதாகையை ஒளிர்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த பதாகை அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்ததை அடுத்து தற்போது மீண்டும் அந்த பதாகை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் வண்ண விளக்குகளால் ஜொலித்து வருகிறது.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் வண்ண விளக்குகள் அலங்காரத்துடன் தமிழ் வாழ்க என்ற எழுத்து பலகை மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிடத்தில் தமிழ் வாழ்க பலகை நிறுவப்பட்டது என்பது தெரிந்தது.

இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ் வாழ்க என்ற பதாகைகள் நிறுவ வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.