பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் வெளிப்படையான உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பெகாசஸ் மென்பொருள் மூலமாக தனிநபர்களின் தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த வழக்கு விசாரணை இன்று விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்பட்டது.
இதன்போது மத்திய அரசு சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்த விவகாரம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.
அத்துடன் இந்த விடயம் பொது விவாதத்திற்கு வந்துவிட்டால் அது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
உளவுப் பணிகளுக்கு எந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது என்பதை தீவிரவாதிகள் அறிந்துக்கொள்ளும் நிலை ஏற்படும் எனவும் அவர் கூறினார்.
இதனையடுத்து தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதை ஏற்பதாக கூறிய நீதிபதிகள், தனிப்பட்டவர்களின் தெலைப்பேசிகள் உளவு பார்க்கப்படுவது குறித்த முறைப்பாட்டிற்கு அரசின் பதில் என்ன என்றும் கேள்வி அவர் எழுப்பினார்.