இந்தியாவின் ஒடிசா, மராட்டியம், மேகாலயா போன்ற மாநிலங்கள், தங்கள் மாநிலத்துக்கு விமானத்தில் வருபவர்கள், கொரோனா இல்லை என்பதற்கான ‘நெகட்டிவ்’ சான்றிதழுடன்தான் வர வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளன.
பயணத்துக்கு முந்தைய 72 மணி நேரத்துக்குள் இந்த பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளன.
இதனால், உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை குறைந்து, தங்களது வருவாய் பாதிக்கப்படுவதாக மத்திய அரசிடம் விமான நிறுவனங்கள் முறையிட்டன.
இதையடுத்து, 2 தவணை தடுப்பூசி போட்டவர்களை, ‘கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் இல்லாமலே உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய அனுமதிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து மாநில அரசுகளுடனும், விமான நிறுவனங்களுடனும், விமான நிலையங்களுடனும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.