• Tue. Oct 15th, 2024

தமிழகத்தில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுமா?

Jun 19, 2021

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை காலை 6 மணியோடு முடிகின்றது.

கொரோனா இரண்டாம் கட்ட அலை கடுமையாக பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு அதிகரித்த நிலையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் முன்னெடுப்புகளால் சமீப காலமாக குறைந்துள்ளது.

பலத்த கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அமலுக்குப் பின்னர் இப்போது கொரோனா பாதிப்பு குறைந்து தமிழகத்தில் 9000க்குள் வந்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள திருப்பூர்,கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர்த்து, 27 மாவட்டங்களில் சில தளர்களுடன் கூடிய ஊரடங்கு உள்ளது.

இந்நிலையில் இன்று(19) தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இதில் அடுத்த வாரம் முதல் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் போக்குவரத்து அனுமதிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.