• Mon. Feb 17th, 2025

ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தயார்

Dec 6, 2021

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா உறுதியளித்தார்.

கண்டியில் நேற்று(05) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

”புதிய மாறுபாடு தொடர்பில் நிபுணர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக முழுமையான பகுப்பாய்வுக்குப் பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்கால பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, தற்போதைய சுதந்திரமான இயக்கத்தைத் தொடர மக்கள் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.