• Sat. Sep 23rd, 2023

இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளிலும் இன்று ஆரம்பிக்கப்பட்டது

Jan 10, 2022

இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளிலும் தரம் 1 தொடக்கம் 13 வரையான வகுப்புக்கள் இன்று(10) தொடக்கம் வழமைபோல் ஆரம்பிக்கப்படுவதாக கல்வியமைச்சு தொிவித்துள்ளது.

நாட்டில் கொவிட்-19 அபாயம் தணிந்துள்ள நிலையில் சுகாதார அமைச்சின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் பாடசாலைகள் இன்று தொடக்கம் வழமைக்கு திரும்புவதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.

ஆனாலும் தொற்று அபாயம் தொடர்ந்தும் ஏற்படலாம் என்பதால் பாடசாலைகளில் சிற்றுண்டி சாலைகளை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது.

எனவே பாடசாலை மாணவர்கள் தமது உணவுப் பொருட்களை தாமே வீடுகளில் இருந்து எடுத்து வருமாறும் கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறியுள்ளார்.