• Wed. Dec 4th, 2024

இலங்கை வந்தார் சீன வெளிவிவகார அமைச்சர்

Jan 8, 2022

இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, சற்று முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைத்தினூடாக நாட்டை வந்தடைந்தார்.

சீன அமைச்சருடன் 18 அதிகாரிகள் அடங்கிய குழுவும் வருகை தந்துள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சரை வரவேற்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஆகியோர் விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சரின் விஜயம் கவனம் செலுத்துவதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை விஜயத்தின் பின்னர், நாளை பீஜிங் நோக்கி அவர் பயணமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.