• Sat. Sep 23rd, 2023

விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை வழங்குமாறு பணிப்பு

Jan 11, 2022

இலங்கையில் விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை முறையாக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த விடயம் குறித்து நேற்று(10) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை வழங்கிய அவர், இதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போது முதல் மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது மேற்கொள்ளப்படும் பெரும் போகத்திற்கு அவசியமான உரம் இல்லாதமையால் விவசாயிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.